- துணை அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து கமலா ஹாரிஸ் சொந்த ஊரான துளசேந்திபுரத்தில் கிராமத்தினர் விளக்கு ஏற்றி கொண்டாடினர்.
- குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு அரங்கில் பந்தல் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
- மதுரை மாவட்டம் செக்கானூரணியில் தி.மு.க., சார்பில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
- பருவ மழை நிறைவடைந்து ஏரிகள் மற்றும் கிணறுகள் நிரம்பிய நிலையில் தற்போது விவசாய பணியில் தீவிரம் காட்ட துவங்கியுள்ள விவசாயிகள். இடம்: ரிங்ரோடு, திருவண்ணாமலை.
- ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரியில் முதல் நாள் கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவர்களை மூத்த மாணவர்கள் பூ கொடுத்து வரவேற்றனர்.அருகில் சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் கல்லூரியின் டீன் ஜெயந்தி.இடம்: சேப்பாக்கம், சென்னை.
- திருச்சி மாவட்டம் சூரியூரில் நடந்த ஜல்லிக்கட்டில் சீறி வந்த காளையை அடக்கிய வீரர்.
- விழுப்புரம் நகர பாஜக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
- கள்ளக்குறிச்சி பருத்தி வாரச்சந்தையில் விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டுவந்த பஞ்சு மூட்டைகள் குடோனில் வைக்கப்பட்டுள்ளது