Load Image
Advertisement

ஒரு தமிழச்சி சிந்திக்கிறாள்!

* குற்றவாளிகளை விரட்டிப் பிடிச்சா உயரதிகாரிகள்கிட்டே இருந்து வெகுமதியும், பாராட்டும்; என்ன இது... செயின் பறிப்பு திருடனை விரட்டிப் பிடிச்ச இளைஞனை அழைச்சு பாராட்டுனது ஓகே! ஆனா, தன் கடமையை செஞ்ச காவலர்களுக்கு எதுக்காக பாராட்டும், வெகுமதியும்; இந்த கடமையைச் செய்றதுக்கு தானே அவங்க சம்பளம் வாங்குறாங்க!

* 'எனக்கு இவ்வளவு பணமும், பேரும், புகழும் கொடுத்த மக்களுக்கு ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதான், அரசியலுக்கு வர்றேன்!'னு சொல்ற நடிகர்களைப் பார்த்து, 'அரசியலுக்கு வந்து நல்லது செய்யணும்னு ஏன் நினைக்கிறீங்க; நாங்க உங்களுக்கு கொடுத்த பணத்தை வைச்சே ஏதாவது செய்யுங்களேன்'னு நம்ம மக்கள் ஏன் இன்னும் சொல்லலை!

* 'உங்க நல்லதுக்காகத் தான் ஹெல்மெட் போடச் சொல்றோம்!'னு அறிவுரை சொல்றவங்க, 'நாட்டோட நலனுக்காக கையூட்டு வாங்கக் கூடாது!'ன்னு ஏன் சிந்திக்க மாட்டேங்குறாங்க!
ம்ஹும்... அந்த 'சர்கார்' திருந்திருச்சு!



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement