Load Image
Advertisement

மாண்புமிகு மாணவி!

'பெட்ரோலுக்கு பதிலா தண்ணியில வண்டி ஓடினா எவ்வளவு நல்லாஇருக்கும்?'ங்கிற என் சிந்தனையோட விளைவு தான் இந்த கண்டுபிடிப்பு!' - திருப்பூர் ஜெய்வா பாய் பள்ளியில், 10ம் வகுப்பு பயிலும் யோகேஸ்வரிக்கு, மாநில அளவில் மூன்றாம் பரிசு கொடுத்து கவுரவித்திருக்கிறது மத்திய அறிவியல் தொழில்நுட்ப துறை! அழகாய், அறிவாய் பேசுகிறார் யோகேஸ்வரி...

* உப்பு தண்ணீர்ல இருந்து ஹைட்ரஜன் வாயுவை பிரிச்சு, அதை எரிபொருளா பயன்படுத்தி இரு சக்கர வாகனத்தை இயக்கலாம்னு நிரூபிச்சேன்... பரிசு கிடைச்சது. எதையுமே மாத்தி சிக்கணும்!

* துணிகளை வெட்டுற இயந்திர மனிதன், புவி ஈர்ப்பு விசைக்கு கட்டுப்படாம மிதக்குற போன், மண் இல்லாத விவசாயம்னு, நிறைய ஆய்வுகளுக்கு திட்டம் போட்டிருக்கேன். இந்த தேடல் தான் என் ஜீவன்.

எங்கள் யோகேஸ்வரி!
'விவசாயம், மனிதநேயத்தை அடிப்படையா வைச்சு சுழல்ற அறிவியல் அறிவு நிச்சயம் அவளை உலகறிய வைக்கும்!'
- சுதா, அறிவியல் ஆசிரியை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement