Advertisement

ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவை தேர்வு

யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் சி.டி.எஸ்., எனப்படும் ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சேவைத் தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான இந்தத் தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 417 இந்தத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவோர் * டேராடூனில் உள்ள இந்தியன் மிலிடரி அகாடமி * கேரளாவில் எழிமளாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமி * ஐதராபாத்தில் உள்ள ஏர் போர்ஸ் அகாடமி * சென்னையில் உள்ள ஆபிசர்ஸ் அகாடமி * சென்னையில் உள்ள பெண் களுக்கான அகாடமி ஆகியவற்றில் ராணுவ அதிகாரி பணியில் சேரலாம்.
தகுதிகள்ஐ.எம்.ஏ., ஓ.டி.ஏ., வில் சேர: பட்டப் படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேவல் அகாடமியில் சேர: இன்ஜினியரிங் பட்டப் படிப்பு ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.விமானப்படை அகாடமியில் சேர: இன்ஜினியரிங் பட்டம் ஒன்றை பிளஸ் ௨வில் இயற்பியல் மற்றும் கணிதத்துடன் முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: மாதம் ரூ. 56,100.
பிற குறிப்புகள்: 2.1.1996-1.1.2001க்குள் பிறந்திருக்க வேண்டும் (ஐ.எம்.ஏ.,) திருமணமாகாமல் இருக்க வேண்டும். *2.1.96 - 1.1.2001 க்குள் பிறந்திருக்க வேண்டும் (நேவல் அகாடமி). *2.1.96 - 1.1.2000 க்குள் பிறந்திருக்க வேண்டும் (ஏர் போர்ஸ்). * விண்ணப்பக் கட்டணம் ரூ. 200* தமிழ்நாட்டில் சென்னை, மதுரை ஆகிய இடங்களில் தேர்வு நடத்தப்படும். *ஆன்லைனில் நவம்பர் ௨௬ வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டும். முழு விபரங்களறிய இணைய தள முகவரி: www.upsc.gov.in/sites/default/files/Notice-CDS-1-2019-English.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement