Advertisement

கொத்து சப்பாத்தி!

தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
தக்காளி - 2
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
எண்ணெய், கடுகு, கடலைப்பருப்பு, உப்பு, கறிவேப்பிலை, மஞ்சள் துாள் - தேவையான அளவு

செய்முறை:
சப்பாத்தியை, சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். வாணலியில், எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அதில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன், உப்பு, மஞ்சள் துாள் சேர்த்து வேக விடவும். அந்த கலவையில், வெட்டிய சப்பாத்தி துண்டுகளை போட்டு, நன்றாக கலக்கவும்; கொத்து சப்பாத்தி தயார்.
தொட்டுக் கொள்ள குருமா தேவையில்லை; அப்படியே சாப்பிடலாம். குழந்தைகள் விரும்புவர். உடல் நலனுக்கு ஏற்றது!
- சுமதி, கோவை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement