Advertisement

சட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், சட்டத்துறையில் Assistant Public Prosecutor, Grade-II பிரிவில் காலியாக உள்ள 46 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: பி.எல்., பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பார் கவுன்சிலில் உறுப்பினராக இருக்க வேண்டும். தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும். குற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் ஐந்தாண்டுகளுக்கு குறையாமல் பணியில் இருக்க வேண்டும்.

வயது: பொதுப்பிரிவினர் 34 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.

தேர்ச்சி முறை: பிரிலிமினரி எழுத்துத்தேர்வு, மெயின் எழுத்துத்தேர்வு மற்றும் 'வைவா' அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட ஒன்பது முக்கிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசிநாள் : 2018 அக்., 31.

விபரங்களுக்கு: www.tnpsc.gov.in/notifications/2018_23_notyfn_APP.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement