Advertisement

பாசிப் பயறு சுண்டல்

தேவையான பொருட்கள்:
தோல் நீக்காத முழு பாசிப் பயறு : 1 கப்
தேங்காய் துருவல் : கால கப்
கேரட் துருவல் : கால் கப்
நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி தலா : ஒரு டீ ஸ்பூன்
கடுகு : தேவையான அளவு
பெருங்காயம் : தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் : தேவையான அளவு
உப்பு : தேவையான அளவு

செய்முறை:
* பாசிப் பருப்பை அரை மணி நேரம் மட்டும் ஊற வைத்து, கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து, அடுப்பில் வைத்து சூடானதும் பாசிப் பருப்பைப் போட்டு, கொதிக்க துவங்கியதும், அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும். ஒரு கப் என்றால், ஒரு நிமிடம் ஆனவுடன் அடுப்பை அணைத்து விட்டு, மூடி வைத்து, 15 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால், பருப்பு நன்றாக வெந்து இருக்கும். அதே நேரம் குழையாமல், ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும். பாசிப் பருப்பு அதிகமாக இருந்தால், குறைந்த பட்சம் ஐந்து நிமிடங்களாவது அடுப்பில் இருக்க வேண்டும.
* குக்கரில் வைக்கக் கூடாது; குழைந்து விடும். வெந்த பின், பாசிப் பருப்பில், உப்பு போட வேண்டும்.
* வாணலியை அடுப்பில் வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு போட்டு, வெடித்தவுடன், கருவேப்பிலை, பாடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம் போட்டு வதக்கி பாசிப் பருப்பில் போட்டு அதன் மேல் கேரட் துருவல், தேங்காய் துருவல், விருப்பமானவர்கள் கொஞ்சம் கொத்து மல்லி நறுக்கி துாவலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement