Advertisement

சேப்பங் கிழங்கு, கோதுமை தோசை

தோசைக்கு தேவையானவை
கோதுமை மாவு : 2 கரண்டி
வேகவைத்து மசித்த சேப்பங் கிழங்கு : 2 கரண்டி அளவு
கல் உப்பு : தேவையான அளவு
ஓமம் : ½ டேபிள் ஸ்பூன்
மிளகாய் துாள் : ½ டீ ஸ்பூன்
நறுக்கிய இஞ்சி : 1 டீ ஸ்பூன்
நறுக்கிய பச்சை மிளகாய் : ½ டீ ஸ்பூன்
நெய் : தேவையான அளவு

மசாலா தயார் செய்ய
வேகவைத்த உருளைக் கிழங்கு : 3
நெய் : சிறிதளவு
கல் உப்பு : தேவைக்கு ஏற்ப
மிளகாய் துாள் : ½ டீ ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி : ½ டீ ஸ்பூன்

* முதலில் உருளைக் கிழங்கு கலவையை தயார் செய்து கொள்ள வேண்டும்.
* அதற்கு, ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு, சூடானதும், வேக வைத்து தோல் உரித்த உருளைக்கிழங்கை நன்றாக மசித்து சேர்க்கவும். அதில் உப்பு, மிளகாய் துாள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, லேசாக பொன் நிறம் வரும் வரை வதக்கி, தனியாக எடுத்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவுடன், மசித்த சேப்பங் கிழங்கை சேர்க்கவும். சிறிது நீர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதில் ஓமம், நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து, தோசை ஊற்றுவதற்கு ஏற்ற பதத்திற்கு வரும் வரை நன்றாக கலக்க வேண்டியது அவசியம்.
* தோசைக் கல்லில் நெய் தடவி மாவை ஊற்றி லேசாக வெந்ததும் சுற்றிலும் நெய் விட்டு, மறுபக்கம் திருப்பிப் போட்டு, நன்றாக வெந்தவுடன், அதில் உருளைக் கிழங்கு கலவையை வைத்து ரோல் செய்து, தேங்காய் அல்லது புதினா சட்னியுடன் சாப்பிடலாம்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement