வட அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில், மேகா என்ற நகரம் உள்ளது. இங்கு, 'பென்னர் டெசர்ட் மெடிக்கல் சென்டர்' என்ற, பிரபலமான மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவில், நர்சாக பணியாற்றும், 16 பெண்களும், ஒரே நேரத்தில், கர்ப்பமடைந்துள்ளனர்.
இவர்கள் அனைவருக்குமே, வரும், 2019, பிப்ரவரியில் குழந்தை பிறக்கவுள்ளதை அடுத்து, இப்போதே, விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்ற நர்ஸ் இல்லாமல், திண்டாடி வருகிறது, மருத்துவமனை நிர்வாகம்.
சம்பந்தபட்ட நர்ஸ்கள் கூறுகையில், 'நாங்கள் அனைவரும், ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்தது, திட்டமிட்டு நடந்தது அல்ல; தானாகவே நடந்தது...' என்கின்றனர்.
இந்த, 16 நர்ஸ்களுக்கும் பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும், புதிய உடையை, இப்போதே பரிசாக அளித்துள்ளது, மருத்துவமனை நிர்வாகம்.
— ஜோல்னாபையன்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!