Advertisement

ஜவ்வரிசி சுண்டல்!

தேவையான பொருட்கள்: ஜவ்வரிசி - 1 கப், ஸ்வீட் கார்ன் - முக்கால் காப், வேர்க்கடலை - கால் கப், கீறிய பச்சை மிளகாய் - 2, இஞ்சி துருவல் - 1 ஸ்பூன், குடை மிளகாய், தேங்காய் துருவல், கடுகு, உ.பருப்பு, பெருங்காயம் மற்றும் நெய் தேவையான அளவு.

செய்முறை: ஜவ்வரிசியை மிருதுவாகும் வரை ஊற வைக்கவும். முளை கட்டிய பயறை ஆவியில் குழையாமல் வேக விடவும். வாணலியில் நெய் விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி துருவல், ஊற வைத்த ஜவ்வரிசி, வேக வைத்த பயறு, வேர்க்கடலை உப்பு சேர்த்து கிளறவும். துருவிய கேரட், குடைமிளகாய், தேங்காய் துருவலை துாவி இறக்கவும்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Dr Vijaya Choumiyan - EDINBURGH,யுனைடெட் கிங்டம்

    முதல் முறையாக ஜவ்வரிசி சுண்டல் செய்து பார்த்தேன். இது புதிது. நல்ல ஆரோக்கியமான மற்றும் ருசியாக எளிதில் செய்யும் படி இருக்கிறது. நேரமும் மிச்சம். சுவையுடன் மனமும் நன்கு இருக்கிறது. நவராத்திரிக்கு மாலை நேர வழிபாட்டிற்கு பிறகு சுண்டல் வழங்க வேண்டும் என்று நலம் தரும் நவராத்திரி கட்டுரையில் அறிந்து கொண்டேன். ஜவ்வரிசி சுண்டல் செய்து தரலாமே என்று சொல்ல வீட்டில் அனைவருக்கும் விருப்பம். அணைவருக்கும் பிடித்திருக்கிறது. மலரில் அரசியல் தவிர்த்த சங்கதிகள் நல்ல உபயோகமான தகவல்கள் ஏராளம். கட்டுரையாளருக்கும் உங்களுக்கும் நன்றி.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement