Advertisement

நம்மூர் அதிகாரிகளின் கவனத்திற்கு!

ஐரோப்பிய நாடான, பிரான்சிலுள்ள, வென்டி மாகாணத்தில், 140 ஏக்கர் பரப்பிலான பூங்கா உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கானோர், வந்து செல்கின்றனர். இங்கு, அளவுக்கு அதிகமான குப்பைகள் சேர்ந்து விடுவதால், அவற்றை சுத்தம் செய்வது, பூங்கா நிர்வாகத்துக்கு பெரும் சவாலாக உள்ளது.
இதையடுத்து, ஆறு காகங்களை தேர்வு செய்து, அவற்றுக்கு, குப்பைகளை பொறுக்குவதற்கான சிறப்பு பயிற்சி அளித்துள்ளனர். இந்த பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்ற காகங்கள், இப்போது, பூங்காவில் உள்ள பெரும்பாலான குப்பைகளை பொறுக்கி, அதற்கென வைக்கப்பட்டுள்ள கூடைக்குள் போட்டு விடுகின்றன.
இது குறித்து பூங்கா அதிகாரிகள் கூறுகையில்,'இங்கு வரும் பார்வையாளர்களிடம், குப்பைகளை போட வேண்டாம், என பலமுறை கூறி விட்டோம். யாரும் கேட்பதாக தெரியவில்லை. இதனால், காகங்களை, குப்பை பொறுக்க வைத்து, மனிதர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காகவே, இந்த திட்டத்தை செயல்படுத்தினோம்...' என்றனர்.
நம்மூர் அதிகாரிகளும், இதை பின்பற்றுவரோ?
— ஜோல்னாபையன்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement