Advertisement

கவிதைச்சோலை!

அப்போதுதான்...

அன்பு காட்டி என்னை
துன்பத்தில் தள்ளுங்கள்...
அப்போது தான்
இன்பத்திற்கான வழியை
இதயம் சிந்திக்க துவங்கும்!

ஆசை காட்டி என்னை
மோசம் செய்யுங்கள்...
அப்போது தான்
அமிர்தமும் நஞ்சு என்று
அறிந்துகொள்ள முடியும்!

வார்த்தைகளால் என்னை
வசை பாடுங்கள்...
அப்போது தான்
வருத்தத்தில்
திருத்திக் கொள்ள முடியும்!

அலட்சியத்தால் என்னை
அவமானப்படுத்துங்கள்...
அப்போது தான்
லட்சியத்தை அடைய
லட்சணம் பிறக்கும்!

சோதனையில் என்னை
வேதனைப்படுத்துங்கள்...
அப்போது தான்
சாதனை படைக்க
சக்தி பிறக்கும்!

தொல்லை கொடுத்த என்னை
துரத்தி அடியுங்கள்...
அப்போது தான்
துக்கத்தை தொலைக்க
துணிவு பிறக்கும்!

கால் இடறி என்னை
கவிழ்த்துப் போடுங்கள்...
அப்போது தான்
ஆகாயத்தை தொட
ஆவேசம் பிறக்கும்!

தோல்வியில் என்னை
துாக்கிப் போடுங்கள்...
அப்போது தான்
தொலைத்த வெற்றியை
தேட முடியும்!

துயரங்களிலேயே என்னை
தொடர்ந்து தள்ளுங்கள்...
அப்போது தான்
உயரத்தை அடைய
உந்து சக்தி பிறக்கும்!

- க.அழகர்சாமி, கொச்சி.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • jose -

    super brother

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement