Advertisement

தேதி சொல்லும் சேதி

செப்டம்பர் 25, 1899 - உடுமலை நாராயணகவி பிறந்த நாள்
கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர், சீர்திருத்தவாதி என, பன்முகத் திறமைகள் கொண்டவர். எழுச்சிமிக்க பாடல்களால் மக்களிடம் தேசிய உணர்வை ஊட்டினார்.

செப்டம்பர் 26, 1981 - செரினா வில்லியம்ஸ் பிறந்த நாள்
அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை. கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் அதிக வெற்றிகளைக் குவித்தார். உலகின் 'நம்பர் ஒன்' வீராங்கனையாக 309 வாரங்களுக்கு மேல் நீடித்து இருந்தார்.

செப்டம்பர் 27, 1978 - சர்வதேச கடல்சார் நாள்
கடல் குற்றங்களைத் தடுத்து நிறுத்துவது, பாதுகாப்பு, சட்ட விதிகள் ஆகியவற்றில் சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தும் விதமாக உலக கடல்சார் நிறுவனத்தால் இந்த நாள் கடைப்பிடிக்கப் படுகிறது.

செப்டம்பர் 27, 1980 - உலக சுற்றுலா நாள்
பொருளாதாரம், கலாசாரம், சமுதாய ஒற்றுமை உணர்வு இவற்றை மக்கள் மனத்தில் ஏற்படுத்த உலக சுற்றுலா அமைப்பு செயற்பட்டு வருகிறது. இந்த நாள் ஐ.நா. சபையால் கொண்டாடப் படுகிறது.

செப்டம்பர் 28, 1982 - அபினவ் பிந்த்ரா பிறந்த நாள்
துப்பாக்கி சுடும் வீரர். காமன்வெல்த் (2002) போட்டிகளிலும், பீஜிங் (2008) ஒலிம்பிக்கிலும் தங்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தனி நபர் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியரும் இவரே!

செப்டம்பர் 29, 2000 - உலக இதய நாள்
புகையிலை, முறையற்ற உணவுகள், கொழுப்பு போன்றவை இதய நோயை ஏற்படுத்துகின்றன. இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த, உலக சுகாதார அமைப்பு, யுனெஸ்கோ இணைந்து இந்த நாளைக் கொண்டாடுகின்றன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement