Advertisement

ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா?

ஜப்பானில் நடந்த உண்மை சம்பவம் இது:
ஜப்பான் நாட்டில், பெரும்பாலான வீடுகள் மரத்தால், இரண்டு கனமான கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர், தன் வீட்டை புதுப்பிப்பதற்காக, மரத்தாலான சுவரை பெயர்த்து எடுத்தார்.
அப்போது, இரண்டு கட்டைகளுக்கு இடையில், ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார். அது, எப்படி சிக்கியது என்று ஆராய்ந்தார். வெளிப் பகுதியிலிருந்து ஆணி அடிக்கும்போது, அந்த ஆணி, பல்லியின் ஒரு காலில் இறங்கி இருக்கிறது.
அவருக்கு ஆச்சரியமாக இருந்தது; அந்த ஆணி அடித்து, குறைந்தது மூன்று ஆண்டுகள் இருக்கும். எப்படி இந்த பல்லி, மூன்று ஆண்டுகள் உயிருடன் இருந்தது என்ற சந்தேகம் வர, மேற்கொண்டு வேலை செய்யாமல், அந்த பல்லியை கண்காணித்து வந்தார்.
சிறிது நேரம் சென்றதும், இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதைக் கண்டார். அந்த பல்லி, தன் வாயிலிருந்து உணவை எடுத்து, சுவரில் சிக்கிக் கொண்டிருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்து ஆச்சரியமடைந்தார். மூன்று ஆண்டுகளாக, சுவரில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்துள்ளது, இன்னொரு பல்லி.
சாதாரண ஒரு பல்லியால் முடியும்போது, நம்மால் முடியாதா... 10 மாதம் சுமந்த, தாய் - தந்தைக்கு, அவர்கள் முடியாத காலகட்டத்தில், நம்மால் உணவளிக்க முடியாதா...
- ஜோல்னாபையன்.

Advertisement
 

வாசகர் கருத்து (5)

 • skv - Bangalore,இந்தியா

  ஏமாந்தால் எப்படி ஊரான்ஸோத்தை முழுங்கறதுன்னு பிளான் பண்ணியே நாசமாபோறவன் தான் மனுஷன், நலவ்வர்களொருபோதும் இந்தமாதிரி ஈனத்தொழில் செய்யவேமாட்டானுக, ஒரு சமயம் கிருபானந்தவாரியார் ஸ்வாமிகள் சொன்னார் ஒருவனுக்கு ஒதுங்க ஒரு வீடு (நிழல்) போதுமே என்னாத்துக்கு வாடகை வரும் என்று பத்துவீடுகள் வச்சுண்டு அவஸ்தைப்படணும் என்கிறார் அதற்க்கு கொடியே இருந்த ஒருமனிதன் சொன்னது இந்தய்யாவுக்கு ஒண்ணுமே வேண்டாம் பிள்ளையாக்குட்டியா என்று முனகினான் அதுவும் அவர் காதுலே விழாமால் போவுமா ?அடுத்துவந்தது பதில் இப்படி சொல்லும் நபருக்கு எவ்ளோ பிள்ளைகள் தெரியுமா வகைக்கு ரெண்டு பொண்ணுகள் கணவர் வீட்டுக்கு போயாச்சு பிள்ளைகள் வேலைக்குப்போகாமல் ஜாலியா இருக்காங்க என்றதும் அந்த நபர் அடுத்தநொடி எழுந்துபோயிட்டார் இது நடந்தது ஹிந்து ஹை ஸ்கூல் மைதானத்தில் 1977

 • raghavan - Srirangam, Trichy,இந்தியா

  அடுத்த வீட்டை ஆட்டையை போட்டதை கேட்டுத்தான் நமக்கெல்லாம் பழக்கம்..அப்படித்தானே அரசியல் புள்ளிகள் கோடீஸ்வர கோமான்களாக இருக்கிறார்கள். இவர்கள் பேச்சை கேட்க, நாள் முழுக்க வெயிலில் உக்கார்ந்து கருவாடாகி போனால் ஒரு குவார்ட்டரும், பிரியாணி போட்டாலும் கொடுப்பார்கள். பல்லிகளால் இதை போல செய்து காட்ட முடியுமா??

 • nabikal naayakam - Chennai,இந்தியா

  பல்லி மூன்று ஆண்டுகள்கூட உயிர்வாழுமா என்ன?

  • Rangiem N Annamalai - bangalore,இந்தியா

   அதிக பட்சம் 34 வருடம் .3 வருடம் கணக்கில் இல்லை .நிச்சயம் வாழும் .

 • kundalakesi - VANCOUVER,கனடா

  பல்லி சொல்லுக்கு பலன் அதன் இந்த நேயமுள்ள பாசமே போலும். பல கோவில்களில் பல்லி உருவம் செதுக்கப் பட்டிருக்கும், ( காஞ்சி வரத்தான், ஸ்ரீரங்கம், பார்த்தசாரதி,,,,) அவற்றின் உயரிய குணமே போலும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement