Advertisement

பிரசவத்துக்கு சைக்கிள் பயணம் நியூசிலாந்து அமைச்சர் அசத்தல்

பசிபிக் பெருங்கடலின் தென்பகுதியில் அமைந்துள்ள, தீவு நாடான, நியூசிலாந்தில், ஒரு ஆச்சரியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த நாட்டின், பெண்கள் நலத் துறை அமைச்சராக இருப்பவர், ஜுலி அன்னெ ஜென்டர், வயது: 38.
நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, சமீபத்தில், பிரசவ வலி எடுத்தது. உடனே, அவர் என்ன செய்தார் தெரியுமா?
தன் வீட்டின் முன் நிறுத்தியிருந்த சைக்கிளில் ஏறி, 1 கி.மீ., தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். நிறைமாத கர்ப்பிணி, அதுவும், நாட்டின் அமைச்சர் பதவியில் இருப்பவர், சைக்கிளில் சென்றதை பார்த்து, அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
சைக்கிளில் இருந்து இறங்கிய அவர், வேகமாக மருத்துவமனைக்குள் சென்று, தனக்கு பிரசவ வலி எடுப்பதாக கூறினார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, இரண்டு நாட்களுக்கு பின், அழகான ஆண் குழந்தை பிறந்தது.
நம்ம ஊரில், இதுபோன்ற ஒரு சம்பவத்தை நினைத்து பார்க்க முடியுமா?
— ஜோல்னாபையன்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement