Advertisement

அணு ஆராய்ச்சி மையத்தில் வேலை

இந்தியாவின் அணுசக்தி துறையில் அரிய சாதனைகள் புரிந்து பிரசித்தி பெற்றவர் டாக்டர். ராஜா ராமண்ணா. இவர் பெயரில் அணு ஆராய்ச்சி மையத்தினை மத்திய அரசு நடத்தி வருகிறது. இது மத்திய பிரதேசத்தின் இந்துாருக்கு அருகில் அமைந்துள்ளது. இதில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் காலியாக உள்ள பல்வேறு இடங்களை நிரப்ப தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: பிரிவு 1 ஸ்டைபண்டரி டிரெய்னியில் இயற்பியலில் 5, வேதியியலில் 2, சி.எஸ்.,சில் 3, மெக்கானிக்கலில் 5, எலக்ட்ரிகலில் 1, எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷனில் 5, மெக்கட்ரானிக்சில் 1ம் காலியிடங்கள் உள்ளன. பிரிவு 2ல், எலக்ட்ரிகலில் 3, பிட்டரில் 5, வெல்டரில் 2, மெஷினிஸ்டில் 5, கிரைண்டர் மெஷினிஸ்டில் 1, எலக்ட்ரானிக்சில் 4, எலக்ட்ரோபிளேட்டிங்கில் 2ம் காலியிடங்கள் உள்ளன. இவை தவிர, கிளாஸ் புளோயரில் 2, லேபரட்டரியில் 3ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: விண்ணப்பதாரர்கள் 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: முதல் பிரிவு காலியிடங்களுக்கு தொடர்புடைய பிரிவுகளில் பட்டப் படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு தேவைப்படும். இரண்டாவது பிரிவு காலியிடங்களுக்கு தொடர்புடைய டிரேடு பிரிவில் ஐ.டி.ஐ., சான்றிதழ் படிப்பு தேவைப்படும்.

தேர்ச்சி முறை
: அப்ஜெக்டிவ் வகையிலான எழுத்துத் தேர்வு மூலமாக இந்த இடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள்: 2018 அக்., 1.

விபரங்களுக்கு: www.rrcat.gov.in/hrd/Openings/Current_Openings.html

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement