Advertisement

கோவை விவசாய பல்கலையில் வாய்ப்பு

தமிழகத்தின் பெருமைக்குரிய விவசாயப் பல்கலைக் கழகம் கோவையில் அமைந்துள்ளது.
விவசாயம் தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளால் உலகெங்கும் அறியப்படும் இந்தப் பல்கலைக்கழகத்தில் ஹார்டிகல்சர் பிரிவிலான காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த இடங்கள் ஜூனியர் ரிசர்ச் பெல்லோ வகையிலானவை என்பதும் இதற்கான தலைப்பு "மாஸ் புரொடக்சன் ஆப் ஹார்டிகல்சுரல் பிளான்ட்ஸ்" என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.

கல்வித் தகுதி: பி.எஸ்சி., பட்டப் படிப்பை ஹார்டிகல்சர், அக்ரிகல்சர், அல்லது பி.டெக்., படிப்பை ஹார்டிகல்சரில் முடித்தவர்கள் பங்கு பெறலாம்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் இதற்கான தேர்ச்சி இருக்கும். தகுதி உடைய நபர்கள் வரும் 18.09.2018 அன்று கோவை விவசாயக் கல்லுாரிக்கு தங்கள் சான்றிதழ்கள், நகல்கள், இதர முக்கிய ஆவணங்களுடன் காலை 9 மணியளவில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பங்கு பெறலாம்.

விபரங்களுக்கு
: https://sites.google.com/a/tnau.ac.in/directorate-of-students-welfare/what-s-new

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement