Advertisement

செயல்திறன் மிக்க, 'லெனோவா திங்க்பேட் E480'

நேர்த்தியான வடிவமைப்பு, அதிவேக செயல்திறன், உறுதியான கட்டமைப்பு என மூன்று அம்சங்களில் மேம்பட்ட, 'லெனோவா திங்க்பேட் E480' லேப்டாப் கணினியை, லெனோவா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. எட்டாம் தலைமுறை இன்டெல் கோர் புராசஸர், 32 ஜி.பி., வரையிலான ரேம், ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் உடன், 11 கிரேட் மிலிட்டரி அம்சங்கள் கொண்ட உறுதியான கட்டமைப்பு, ஒரு முறை சார்ஜ் செய்தால், 13 மணி நேரம் தாங்கும் பேட்டரி பேக்-அப், புதிய பாதுகாப்பு அம்சங்கள் என, கவனிக்க வைக்கிறது இந்த லேப்டாப். இதன் தொடக்க விலை- ரூ.32,999/-*
மேலும், 14 இஞ்ச் புல் ஹெச்.டி., திரை, 1.8 GHz உடன் கோர் i3, i5, i7 புராசஸர்கள், விண்டோஸ் 10 இயங்குதளம், 512 ஜி.பி., திறன் கொண்ட இரண்டு விதமான டிரைவ்களை பொருத்தும் வசதி, விருப்ப அம்சமாக 'ராடியான் ஆர்.எக்ஸ்500' டெடிகேட்டட் கிராபிக் கார்ட், குயிக் சார்ஜிங், டால்பி ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட அம்சங்கள் இதிலுள்ளன.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement