Advertisement

ஹானரின் புதிய அறிமுகம் : ஹானர் 7S

குறைந்த விலை ஸ்மார்ட்போன் பிரிவில், 'ஹானர் 7S' மாடல் மூலம், ஸியோமி 5A உள்ளிட்ட பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியை ஏற்படுத்தியுள்ளது ஹானர். 5.45 ஹெச்.டி., திரை, மீடியாடெக் MT6737 புராசஸர், 2 ஜி.பி., ரேம், 16 ஜி.பி., இன்டெர்னல் மெமரி, எல்.இ.டி., பிளாஷ் கொண்ட 13 எம்.பி., பின்புற கேமரா, சாப்ட் பிளாஷ் கொண்ட, 5 எம்.பி., செல்பி கேமரா, உள்ளிட்ட அசத்தலான அம்சங்களை, ஹானர் 7S கொண்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ அடிப்படையிலான இயங்குதளத்தைக் கொண்டுள்ள இதில், 3020 எம்ஏஹெச் பேட்டரி, பேஸ் அன்லாக், டிரிப்பிள் சிம் ஸ்லாட், உள்ளிட்ட அம்சங்களும் உண்டு. உள்ளீட்டு சேமிப்புத்திறனை 250 ஜி.பி., வரை நீட்டித்துக் கொள்ளலாம். கறுப்பு, நீலம் மற்றும் கோல்டு நிறங்களில் வரும் இந்த ஸ்மார்ட்போன், செப்டம்பர் 14ம் தேதி முதல் பிளிப்கார்ட் இணையதளத்தில் மட்டும் விற்பனைக்குக் கிடைக்கும்.

விலை: ரூ.6,999/-

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement