Advertisement

வை-பை செயல்திறனை அதிகரிக்கும் டிஜிசோல்

பொதுவாக இணைய இணைப்புக்காக வீட்டில் பொருத்தப்படும் வை-பை ரவுட்டர், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே செயல்படும். இதனால் கணினி, டிவி, லேப்டாப் என, வெவ்வேறு அறைகளில் உள்ள சாதனங்களில் வை-பை இணைப்பைப் பெற சிரமமாக இருக்கும் அல்லது சிக்னல் பலவீனமாக இருக்கும். இந்தப் பிரச்னைக்கு தீர்வாக வந்திருப்பது, 'DG-WR3001NE டிஜிசோல் வயர்லெஸ் ரிப்பீட்டர்.
இதைச் சரியான இடத்தில் பொருத்திவிட்டால், முதன்மையான வை-பை சாதனத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டு, மேலும் அதிக தூரத்துக்கு இணைய இணைப்பை விரிவாக்கும். அதிகபட்சமாக 300 எம்பி.பி.எஸ்., திறன் கொண்ட இதில், ஒரே நேரத்தில் ஒரு யு.எஸ்.பி., சாதனத்தை சார்ஜ் செய்வதுடன், ஒரு ஈதர்நெட் பாயின்ட் வழியாக பிராட்பேண்ட் கேபிலையும் இணைக்கலாம்.

விலை: ரூ.1,499/-*

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement