Advertisement

தேதி சொல்லும் சேதி

செப்டம்பர் 10, 2003 - உலக தற்கொலை தடுப்பு நாள்
தற்கொலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கம். சர்வதேச தற்கொலைத் தடுப்புக் கூட்டமைப்பு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

செப்டம்பர் 11, 1862 - ஓ.ஹென்றி பிறந்த நாள்
உலகப்புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர். கேலிச்சித்திரங்களும் வரைந்தார். எளிமையான தொடக்கம், இடையில் ஒரு சிக்கல், எதிர்பாராத முடிவு என, இவரது கதைகள் தனித்துவம் மிக்கவை.

செப்டம்பர் 11, 1895 - ஆச்சார்ய வினோபா பாவே பிறந்த நாள்
சுதந்திரப் போராட்ட வீரர். 'பூதான்' எனப்படும் பூமிதான இயக்கத்தைத் தொடங்கினார். 'என்னைவிட காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கியவர்' என்று காந்தியால் புகழாரம் சூட்டப்பட்டார்.

செப்டம்பர் 15, 1860 - மோக்சகுண்டம் விஸ்வேசுவரய்யா பிறந்த நாள்
புகழ்பெற்ற பொறியாளர். இவரது பிறந்த நாள் இந்தியாவில் பொறியாளர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 'இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதாரம்' என்ற நூலை எழுதினார். 1955இல் பாரத ரத்னா விருது பெற்றார்.

செப்டம்பர் 15, 1909 - சி.என்.அண்ணாதுரை பிறந்த நாள்
அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர், இலக்கிய எழுத்தாளர். 'அறிஞர் அண்ணா' என அழைக்கப்பட்டார். அரசியலுக்கு முன்பு பள்ளி ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணியாற்றினார்.

செப்டம்பர் 16, 1922 - கி.ராஜநாராயணன் பிறந்த நாள்
தமிழ் எழுத்தாளர். 'கரிசல் இலக்கியத்தின் தந்தை'. கரிசல் பகுதியின் வட்டார அகராதியை உருவாக்கினார். 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலுக்காக 1991இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement