Advertisement

மாணவர் சேர்க்கைக்கு ஆதார் அவசியமில்லை

ஆதார் அடையாள அட்டை இல்லாத மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க மறுப்பதாக, நாடு முழுவதிலும் இருந்து புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஆதார் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. நிறுவனம், அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், 'ஆதார் இல்லை என்பதைக் காரணம் காட்டி, பல பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க மறுப்பதாகத் தெரிய வருகிறது. அப்படிச் செய்வது சட்டப்படி குற்றம். ஆதார் அட்டை இல்லாத மாணவர்களிடம், வேறு அடையாள அட்டைகளைப் பெற்றுக்கொண்டு, பள்ளியில் சேர்க்கவேண்டும். தேவையெனில், பள்ளி நிர்வாகமே உள்ளூர் வங்கிகள், தபால் நிலையங்கள், மாநிலக் கல்வித் துறையினரைத் தொடர்புகொண்டு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்களை அமைத்துக்கொள்ளலாம்' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement