Advertisement

குறுதானிய கலவை கொழுக்கட்டை

சாமை அரிசி - 1/2 கப்
வரகு அரிசி- 1/2 கப்
குதிரைவாலி அரிசி - 1/2 கப்
தினை அரிசி - 1/2 கப்
உளுந்தம் பருப்பு - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பச்சை மிளகாய் - 3
கறிவேப்பிலை- 10 இலைகள்
கடலை எண்ணெய் - 2 ஸ்பூன்
உப்பு - சிறிதளவு

செய்முறை
4 வகை அரிசியையும் மற்றும் உளுந்தையும் 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் நீரை வடித்து மிக்ஸியில் இட்டு மாவாக பொடித்து கொள்ளவும். பின், இந்த மாவுடன் துருவிய தேங்காயை சேர்த்து 1 கப் தண்ணீர் கலந்து பிசையவும்.
வாணலியை அடுப்பில் ஏற்றி கடுகு, கறிவேப்புலை தாளித்து, அத்துடன் வெங்காயம், தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். இந்த கலவையை மாவு கலவையுடன் சேர்த்து பிசையவும். பின் இக்கலவையை பிடி கொழுகட்டைகளாக பிடித்து இட்லி பானையில் வைத்து 30 நிமிடங்கள் வேக விட்டு எடுக்கவும்.

Advertisement
 

வாசகர் கருத்து (1)

  • Manian - Chennai,இந்தியா

    நல்ல ரெசிபிதான். ஆனால், " சாமை அரிசி - 1/2 கப். வரகு அரிசி- 1/2 கப், குதிரைவாலி அரிசி - 1/2 கப், தினை அரிசி - 1/2 கப் " ஈவாரை என்ன செய்து எப்படி லொழுக்கடையில் சேர்க்கலாம் என்பது தெளிவில்லையே

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement