Advertisement

கதளி வாழை பழ பாயாசம்

கதளி பழம் - 5
பாசி பருப்பு - 1 கப்
கரும்பு சர்க்கரை - 2 கப்
நெய்- 4 ஸ்பூன்
ஏலக்காய் - 5
முந்திரி - 10
உலர் திராட்சை- 20
தேங்காய் பால் - 1 கப்
காய்ச்சிய பசும் பால் - 1 கப்
குங்கும பூ - சிறிதளவு

செய்முறை
பாசிபருப்பை வேகவைக்கவும். கரும்பு சர்க்கரையை 1/2 கப் தண்ணீரில் கரைத்து அடியில் தங்கி இருக்கும் மண் போக வடிகட்டவும். ஏலக்காய், முந்திரி, திராட்சையை பாதி நெய்யில் பொன்னிறமாக பொறித்து கொள்ளவும்.
கதளி பழத்தை நீளவாக்கில் சிறு துண்டுகளாக்கி மீதம் இருக்கும் நெய்யில் லேசாக வதக்கி கொள்ளவும். பின் இதனுடன் வேகவைத்த பாசி பயறு, காய்ச்சிய பசும்பால், தேங்காய் பால், கரைத்து வைத்துள்ள கரும்பு சர்க்கரை அனைத்தையும் கலந்து நன்கு கொதித்து வரும் போது, நெய்யில் வறுத்த ஏலக்காய் முந்திரி, திராட்சை மற்றும் குங்கும பூ வை மேலே துாவி இறக்கவும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement