Advertisement

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: கொழுப்பை குறைக்கும் குடம் புளி!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதிகம் விளையும் குடம் புளி, மீன் குழம்பு, ரசம் என, கேரள சமையலில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாக நாம் பயன்படுத்தும் புளியை விட கடினமாகவும், சிவப்பு நிறத்திலும் இருக்கும் இது, மரத்தில் காய்க்கும்.
உடல் எடையைக் குறைப்பதற்கும், செரிமானப் பிரச்னைகளை சரி செய்வதற்கும், குடம் புளியின் பயன் குறித்து, ஆயுர்வேத மருத்துவத்தில் விரிவாக சொல்லப்பட்டு உள்ளது. இந்தியாவில் இதன் பயன்பாடு குறைவு; எனவே, அதிக பயன்பாடு இல்லாத நிராகரிப்பு பட்டியலில் உள்ளது. 1997க்கு பின், ஐரோப்பாவில் அதிக பயன்பாட்டில் உள்ளது.
குடம் புளி சர்பத் தயாரித்து, தினமும் குடித்தால், அதிகப்படியான உடல் எடை குறையும். 100 கிராம் புளியை, இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைத்து, மிக்சியில் அரைத்து, அத்துடன், கால் கிலோ பாகு வெல்லம், ஒரு டீஸ்பூன் மிளகு, சீரகம், கறுப்பு உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, ஆறின பின், வடிகட்டி வைத்துக் கொள்ளலாம்.
இந்த சாறை, ஒரு டம்ளர் நீருக்கு, ஒரு ஸ்பூன் சேர்த்து, தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

ஐரோப்பிய யூனியன் உணவு மற்றும் விவசாய அமைப்பு (யு.என்.எப்.ஏ.ஓ.,) அறிக்கையிலிருந்து...

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement