Advertisement

டயட் சமையல்: கேப்சிகம் வெஜ் ஆம்லெட்

தேவையான பொருட்கள்:
கடலை மாவு : 1/2 கப்
கேப்சிகம் : 1 பெரியது
மிளகாய் தூள் : 1 டீஸ்பூன்
சோள மாவு : 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் : 2
வெங்காயம் : 1
தக்காளி : 1
மிளகு தூள் : 1/2 டீஸ்பூன்
மல்லி இலை : சிறிதளவு
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை:
* குடைமிளகாயை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளவும். அதன் விதைப் பகுதியை தனியே பிரித்து வைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, மல்லி இலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோளமாவு, நறுக்கிய தக்காளி, வெங்காயம், மல்லி இலை, பச்சை மிளகாய், குடைமிளகாய் விதைகள் ஆகியவற்றை சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவுப் பதத்திற்கு தயார் செய்துகொள்ளவும். தேவைக்கேற்ப மிளகாய் தூள், மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
* வாணலி சூடானதும், சிறிது எண்ணெய் விட்டு அதன் மீது வட்டமாக நறுக்கிய குடைமிளகாயை வைக்கவும். அந்த வட்டத்துக்குள், கலந்து வைத்திருக்கும் மாவை விடவும். குடைமிளகாயை சுற்றி எண்ணெய் விட்டு, இரண்டு பக்கம் நன்கு வேகவிட்டு எடுத்தால், சுவையான கேப்சிகம் வெஜ் ஆம்லெட் தயார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement