Advertisement

ராகி புதினா வடை

தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு : ½ கிலோ
தேங்காய் துருவல் : ½ மூடி
புதினா : ½ கட்டு
இஞ்சி : 50 கிராம்
பூண்டு: 50 கிராம்
மிளகு, சீரகம் : 2 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் : 4
உப்பு : தேவையான அளவு

செய்முறை:
* கேழ்வரகு மாவில் தேங்காய் துருவலை தூவி, பொடியாக அரிந்த புதினாவை அத்துடன் சேர்க்கவும்.
* இஞ்சி, பூண்டு இரண்டையும் மைய இடித்து அத்துடன் சேர்க்கவும். பின், மிளகு, சீரகம் இரண்டையும் ஒன்றிரண்டாக இடித்து மாவுடன் சேர்க்கவும்.
* வெங்காயத்தை பொடியாக அரிந்து மாவில் போட்டு, உப்பு சேர்த்து, வடை தட்டும் பதத்திற்கு நீர் விட்டுப் பிசைந்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சுவையும் சத்தும் கொண்ட ராகி புதினா வடை தயார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement