Advertisement

ஆரோக்கிய சமையல்: முருங்கைக்காய் சூப்

முருங்கையின் காய், கீரை, பூ எல்லாமே ஆரோக்கியத்துக்கு உகந்தவை தான். முருங்கைக் கீரையை போல, முருங்கைக்காயிலும் கால்சியம் மற்றும் இரும்பு சத்துகளும், வைட்டமின்கள் உள்ளிட்ட பிற சத்துகளும் நிறைந்திருப்பதால், எலும்புகள் வலுவடையும். இதனால் நோயெதிர்ப்பு ஆற்றலும் அதிகரிக்கும். இந்த நன்மைகளை பெற, முருங்கைக்காயை சூப் வடிவில் அருந்துவது சிறப்பாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:
முருங்கைக்காய் : 3
சின்ன வெங்காயம் : 5
தக்காளி : 1 சிறியது
பச்சை மிளகாய் : 1
சீரகம் : 2 டீஸ்பூன்
பூண்டு : 4
வெண்ணெய் : 2 டீஸ்பூன்
மல்லி இலை : சிறிதளவு
உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை:
* துண்டுகளாக நறுக்கப்பட்ட முருங்கைக்காயை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த தண்ணீரையும் தனியாக எடுத்து வைக்கவும்.
* பின், வேகவைத்த முருங்கைக் காயின் சதைப்பகுதியை மட்டும் தனியாக பிரித்தெடுக்கவும்.
* அடுத்து, பச்சைமிளகாய், சீரகம், பூண்டு ஆகியவற்றை மிக்சியில் இட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
* வாணலி சூடானதும், வெண்ணெய் விட்டு, அதில் அரைத்த பச்சை மிளகாய் பேஸ்டை சேர்க்கவும். அத்துடன், பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின், பொடியாக நறுக்கிய சிறிய தக்காளி, மல்லி இலை இரண்டையும் சேர்க்கவும்.
* இறுதியாக, தனியாக எடுத்து வைத்திருக்கும் முருங்கை சதை, வேக வைத்த தண்ணீர் இரண்டையும் சேர்த்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கினால், சத்தான முருங்கைக்காய் சூப் தயார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement