Advertisement

செட்டிநாடு சுவை: கறி பொடிமாஸ்

தேவையான பொருட்கள்:
கொத்துக் கறி: ¼ கிலோ
கடலைப் பருப்பு : 25 கிராம்
மிளகாய் தூள்: 2 ஸ்பூன்
பூண்டு: 10 பல்
சிறிய வெங்காயம் : 15
பச்சை மிளகாய் : 4
மஞ்சள் தூள் : ¼ ஸ்பூன்
தேங்காய் துருவல் : 2 ஸ்பூன்
எண்ணெய் : 100 மி.லி.,
சோம்பு, பட்டை : தாளிக்க
உப்பு : தேவையான அளவு

செய்முறை:
* சிக்கனோ, மட்டனோ, வாங்கும்போதே கறியை கொத்தி வாங்க வேண்டும். அதை நன்றாக கழுவி, 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு ஆகியவை சேர்த்து வேக விடவும்.
* நன்றாக சுருண்டு வந்தவுடன் இறக்கிவிடவும். பூண்டு, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
* கடலைப் பருப்பை நன்றாக வேக வைக்கவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டையை தாளிக்கவும்.
* நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றை அதில் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
* பின், கொத்துக்கறியை அதில் சேர்த்து கிளறவும். நன்றாக கிளறிவிட்டு, வெந்த கடலைப் பருப்பையும், தேங்காயையும் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement