Advertisement

சிக்கிமுக்கு நேரடி விமான சேவை

இந்தியாவின் மிக அழகிய மாநிலமான சிக்கிம், சுற்றுலா பயணியருக்கு பிடித்தமான இடமும் கூட. ஆனால், சிக்கிம் செல்ல நேரடி விமான சேவை கிடையாது. விமானத்தில் சிக்கிம் தலைநகர் கேங்டாக் செல்பவர்கள், மேற்கு வங்காளத்தில் இருந்து கோல்கட்டா அல்லது பக்தோரா நகரங்கள் வரை விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை வழியாக செல்லும் நிலைதான் இதுவரை இருக்கிறது.
இந்த நிலையில், காங்டாக் நகருக்கு அருகில், 30 கி.மீ., தொலைவில், பக்யோங் விமான நிலையம் அமைக்கப்பட்டு விட்டதால், காங்டாக்குக்கு நேரடி விமானங்களை இயக்க, ஸ்பைஸ் ஜெட் விமான சேவை நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஸ்பைஸ் ஜெட்டின் முதல் விமானம், வரும் அக்டோபர் 4ம் தேதியன்று, கோல்கட்டா நகரில் இருந்து கேங்டாக்குக்கு இயக்கப்படும். விரைவில் விமான சேவைகள் விரிவுப்படுத்தப்படும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement