Advertisement

இரவிலும் தாஜ் மஹாலின் அழகை ரசிக்கலாம்

காதலின் சின்னமாக கவித்துவ அழகுடன் யமுனை நதிக்கரையில் அமைந்திருக்கிறது, தாஜ் மஹால். இதன் அழகைக் காண ஆக்ரா செல்லும் பயணியர், பொதுவாக பகல் நேரத்திலேயே சென்று பார்க்கின்றனர். இந்த பளிங்கு மாளிகை பகலில் பேரழகுடன் காணப்பட்டாலும், இரவு நேரத்தில் நிலவொளியில், குறிப்பாக பெளர்ணமி இரவில் தனி அழகுடன் ஜொலிக்கும். நீல வானத்தின் பின்னணியில் தாஜ் மஹாலின் மயக்கும் அழகை அருகிலிருந்து மக்கள் கண்டு மகிழ, இந்திய தொல்லியல் துறை ஏற்பாடு செய்கிறது.
பெளர்ணமி இரவு, அதற்கு முந்தைய மற்றும் அடுத்த இரண்டு நாட்கள் என, மாதத்தில் மொத்தம் ஐந்து நாட்களில், தாஜ்மஹாலுக்குள் இரவு நேரத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை, ரம்ஜான் மாதம் ஆகிய நாட்களில் மட்டும் அனுமதி இல்லை. இதற்கு மால் ரோடில் உள்ள தொல்லியல் அலுவலகத்தில் நேரடியாகவும், தாஜ் மஹாலின் இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம். கட்டணம் ஒருவருக்கு ரூ.50/- மட்டுமே. 30 நிமிடங்கள் மட்டுமே அனுமதி.
மேலும் விபரங்களுக்கு: https://www.tajmahal.gov.in/nightview.html

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement