Advertisement

இதயத் திருடி!

படைப்பு : முத்தி (பிரதியின் நிர்வாணம் சிறுகதை தொகுப்பு)
எழுதியவர் : லைலா எக்ஸ்
வெளியீடு: மணல் வீடு

போதை கணவன் அடித்த அடியில் காதும் உதடுகளும் கிழிந்து தொங்க வீட்டு வாசலில் கிடந்த முத்தி, அவ்வழியே வந்த மகளின் சிநேகிதியிடம், 'அம்மா ஸ்கூலுக்கு வர்றதுக்கு செத்த லேட்டாகும்னு சுபாஷினிகிட்டே சொல்லி, ஹெட்மிஸ்கிட்டே சொல்லச் சொல்லிடு கண்ணு' என்றாள். மகள் சுபாஷினி பிளஸ் 1 படிக்கும் பள்ளியில், முத்திக்கு கழிப்பறை துப்புரவு பணி.

ஒரு மணி நேரத்திற்குப் பின்...
'ஏய்... டாய்லெட் எல்லாம் சுத்தம் பண்ணியாச்சு; நீ போய் டீ வாங்கிட்டு வா!' பள்ளிக்குள் நுழைந்ததும் முத்தியை விரட்டினாள் தலைமையாசிரியை. துளியும் அழுக்கில்லாமல் சுத்தமாக கழுவப்பட்டிருந்தது கழிப்பறை.
அன்று இரவில்... ரயிலடியில்... தோழியிடம்...
'ஆயா வேலைக்காக கொடுத்து வைச்சிருந்த காசை வாங்கிட்டேன்டி. பணம் கொடுத்து படிக்கிற ஸ்கூல்ல நாளைக்கே பிள்ளையை சேர்த்துடணும். இன்னைக்கு அவ பாவாடை முழுக்க பினாயில் நாத்தம்டி!' தலையில் அடித்து அழுதாள் முத்தி.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement