Advertisement

வானமே எல்லை!

'பவுன்டெய்ன்' எனும் செயற்கை நீரூற்று சாதனத்தை வீட்டில் இருந்தபடியே தயாரித்து லாபம் பார்க்கலாம். இதற்கு அடிப்படை தேவை... சில பொருட்களும், நல்ல பயிற்சியும்!

விரும்பும் செயற்கை நீரூற்றின்
வடிவத்திற்கு ஏற்ப தெர்மாகோலை வெட்டி பெவிகால் மூலம் இணைத்து, தெர்மாகோல் துகள்களுடன் 'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' கலந்து பூசி, வார்னிஷ், பேப்ரிக் பெயின்ட் மற்றும் செயற்கை பூக்களால் அலங்கரித்து, எலக்ட்ரிக் மோட்டார் உதவியுடன் நீரூற்றை பொங்கச் செய்ய குறைந்தபட்சம் மூன்று நாட்கள் ஆகும்.
சந்தைப்படுத்துதல்: உணவகம் மற்றும் விடுதிகளின் அலங்காரத்திற்கு எப்பொழுதுமே செயற்கை நீரூற்று முதல் தேர்வாக இருப்பதால் அவ்விடங்களை விற்பனைக்கு அணுகலாம். அடுத்த இலக்கு, பரிசுப்பொருள் விற்பனையகங்கள். வாஸ்து பொருளாகவும் இது பயன்படுவதால் வீடுகள் மூன்றாவது இலக்கு. நவராத்திரியின் கொலுக்களை இது கூடுதல் அழகாக்கும் என்பதால் அத்தருணங்களில் அதிக விற்பனையை பார்க்க முடியும். 2,000 ரூபாய் முதலீட்டிற்கு 1,000 ரூபாய் லாபம் நிச்சயம்.
தகவல் உதவி: உமாராஜ், சென்னை.
95001 48840

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement