Advertisement

விநாயகர் பூஜைக்கு உகந்த இலைகள்!

விநாயக சதுர்த்தியன்று, 21 வகையான இலைகளைக் கொண்டு பிள்ளையாரை அர்ச்சிப்பது சிறந்தது. அதனால், கீழ்க்காணும் பலன்கள் கிடைக்கும்.
முல்லை இலை - அறம் வளரும்
கரிசலாங்கண்ணி இலை - பொருள் சேரும்
வில்வம் இலை - விரும்பியவை அனைத்தும் கிடைக்கும்
அருகம்புல் - அனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும்
இலந்தை இலை - கல்வியில் மேன்மை அடையலாம்
ஊமத்தை இலை - பெருந்தன்மை கைவரப் பெறும்
வன்னி இலை - பூவுலக வாழ்விலும், சொர்க்க வாழ்விலும் நன்மைகள் கிடைக்கும்
நாயுருவி - முகப் பொலிவும், அழகும் கூடும்
கண்டங்கத்திரி - வீரமும், தைரியமும் கிடைக்கும்
அரளி இலை - எந்த முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்
எருக்கம் இலை - கருவிலுள்ள சிசுவுக்கு பாதுகாப்பு கிடைக்கும்
மருதம் இலை - மகப்பேறு கிடைக்கும்
விஷ்ணுகிராந்தி இலை - நுண்ணறிவு கைவரப் பெறும்
மாதுளை இலை - பெரும் புகழும், நற்பெயரும் கிடைக்கும்
தேவதாரு இலை - எதையும் தாங்கும் மனோ தைரியம் கிடைக்கும்
மரிக்கொழுந்து இலை - இல்லற சுகம் கிடைக்கப் பெறும்
அரச இலை - உயர் பதவியும், பதவியால் கீர்த்தியும் கிடைக்கும்
ஜாதிமல்லி இலை - சொந்த வீடு, மனை, பூமி பாக்கியம் கிடைக்கும்
அகத்தி இலை - கடன் தொல்லையிலிருந்து விடுதலை கிடைக்கும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement