Advertisement

கவிதைச்சோலை!

நம்பிக்கை என்ற நல்லதொரு சக்தி!

கல்வி கற்றதால்
கயமைத் தனத்தை
இழந்தோம்!

பக்குவப்பட்ட
பண்புகளால்
பகைவர்களை
இழந்தோம்!

பாடுபட்டதால்
பட்டினியை
இழந்தோம்!

முன்னேறும்
பகுத்தறிவால்
மூட நம்பிக்கையை
இழந்தோம்!

வேலை
காரணமாய்
வெட்டிப் பேச்சை
இழந்தோம்!

கள்ளமில்லாத
காரணத்தால்
கபடத்தை
இழந்தோம்!

நல்ல எண்ணங்களை
நட்பாக்கியதால்
நயவஞ்சகத்தை
இழந்தோம்!

அறிவு சார்ந்த
கொள்கைகளால்
அறியாமையை
இழந்தோம்!

துயர் துடைக்கும்
துாய உள்ளத்தால்
துரோகத்தை
இழந்தோம்!

தனக்காக வாழாமல்
பிறர்க்காக வாழ்ந்ததால்
தன்னலத்தை
இழந்தோம்!

ஆதலால்
இப்போது, இங்கு
இழந்தோம் என்பது
இழக்க வேண்டியது
இழி சக்திகள் தான்!

ஆனால்,
எப்போதும்
எதற்காகவும்
எந்த இடத்திலும்
இழக்கக் கூடாது,
'நம்பிக்கை' என்ற
நல்லதொரு
சக்தி மட்டுமே!

பெ.கருணைவள்ளல், சென்னை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement