Advertisement

பாதுகாப்பு படைகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு

நமது பாதுகாப்பு படைகளில் வீரர்களை தேர்வு செய்வதில் மிக முக்கியமான மையங்களாக டேராடூனில் உள்ள இந்தியன் மிலிட்டரி அகாடமி, எழிமலாவில் உள்ள இந்தியன் நேவல் அகாடமி, ஐதராபாத்திலுள்ள ஏர்போர்ஸ் அகாடமி, சென்னையிலுள்ள ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமி போன்றவை திகழ்கின்றன. இதில் காலிப்பணியிடங்களை, யு.பி.எஸ்.சி., கம்பைண்ட் டிபன்ஸ் சர்வீசஸ் தேர்வு மூலமாக நிரப்புகிறது. 414 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிட விபரம்: இந்தியன் மிலிட்டரி அகாடமியில் 100, இந்தியன் நேவல் அகாடமியில் 45, ஏர்போர்ஸ் அகாடமியில் 32, ஆண்களுக்கான ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் 225, பெண்களுக்கான ஆபிசர்ஸ் டிரெய்னிங் அகாடமியில் 12ம் என மொத்தம் 414 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: நேவல் அகாடமிக்கு விண்ணப்பிக்க இன்ஜினியரிங்கில் பட்டம் தேவை. இதர பிரிவுகளுக்கு பட்டப் படிப்பு போதும். இருப்பினும் ஏர்போர்ஸ் அகாடமியில் சேர பட்டப் படிப்பில் இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருப்பது தேவைப்படும்.

தேர்ச்சி முறை: இது பல்வேறு நிலைகளிலான தேர்ச்சி முறையாக இருக்கும். மருத்துவத் தகுதி காணுதல், பெர்சனாலிடி டெஸ்ட், சைக்காலாஜிக்கல் ஆப்டிடியூட் டெஸ்ட், இன்டலிஜென்ஸ் டெஸ்ட், சர்வீஸஸ் செலக்சன் போர்டு நடத்தும் நேர்காணல் என்று இருக்கும்.

தேர்வு மையங்கள் : சென்னை, மதுரை உள்ளிட்ட நாட்டின் முக்கிய மையங்கள் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுதலாம்.

விண்ணப்பிக்கும் முறை
: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 200.

கடைசி நாள்: 2018 செப்., 3.

விபரங்களுக்கு: www.upsc.gov.in/examinations/CombinedDefenceServicesExamination(II)%2C2018

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement