Advertisement

அனுபவம்: பாப்பா ரொட்டி

டீ கடை என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் விஷயம், டீயும், பன்னும் தான். இவற்றுக்காகவே, பிரத்யேகமாக செயல்பட்டுவரும் உணவகமே, பாப்பா ரொட்டி. வேளச்சேரி, பீனிக்ஸ் மாலின், 'பலேடியம்' பகுதியில் அமைத்திரக்கிறது, இந்த உணவகம்.
பன்னும், டீயும் தான் இங்கு ஸ்பெஷல், மலேசியாவில் தொடங்கப்பட்ட இந்த உணவகம், இப்போது பல நாடுகளில் பரவி புகழ் பெற்றிருக்கிறது. தமிழகத்தில், சென்னையில் தான் முதலில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் ஸ்பெஷலான பன் தயாரிப்பை, ரகசியமாக வைத்திருக்கின்றனர். உலகமெங்கும் இருக்கும் இவர்களின் உணவகங்ளுக்கு, தலைமையிடமான மலேசியாவிலிருந்தே பன் தயார் செய்து அனுப்பப்படுகிறது. இங்கு கிடைக்கும் பன்னை வேறு எங்கும் சுவைக்க முடியாது என்பதே, இதன்மீதான எதிர்பார்ப்பை கூட்டுகிறத.
சீஸ், டேட்ஸ், ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், தேன் என, பலவித சுவைகளில் பன்கள் கிடைக்கின்றன. தவிர, ஸ்ட்ராபெர்ரி, வெனிலா போன்ற பிளேவர்களில் ஐஸ்கிரீம் பன் கூட சுவைக்கலாம். இதற்கு பொருத்தமாக, பாப்பா ரொட்டி மில்க் சாய் சரியான தேர்வு. பாப்பா ரொட்டி மில்க் சாய் என்றால், பாலை சுண்ட காய வைத்து, அதில் டீ தயார் செய்வதே. இந்த பன்னும் டீயுமே சுவைக்க போதுமானது. இதுவிர, பிஷ் அண்ட் சிப்ஸ், பிஷ் பிங்கர், முட்டை சாக்சுகா, முட்டை சாண்விட்ச், செட்ிடநாடு சிக்கன் சாண்விட்ச், பழச்சாறுகள் என, பலவித உணவுகளும் இங்கு பரிமாறப்படுகின்றன.
டீ பிரியர்களே... வித்தியாசமான சுவையில் டீயும், பன்னும் சுவைக்க விரும்பினால், நிச்சயம் இந்த பாப்பா ரொட்டி உணவகத்திற்கு செல்லலாம். அவர்களின் அன்பு கவனிப்பும், அசத்தல் சுவையும், உணவகத்தின் உள் அலங்காரமும், நிச்சயம் உங்களை குஷிப்படுத்தும்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement