Advertisement

'பாசிப் பருப்பு நெய் உருண்டை'

பாசிப் பருப்பு, புரதச் சத்து நிறைந்தது. இதில் பல்வேறு பலகாரங்களை செய்யலாம். பாசிப் பருப்பு நெய் உருண்டை சத்துமிக்கது. இதை குழந்தைகளுக்கு கொடுத்து வர, அபார வளர்ச்சி தெரியும். இது செட்டிநாட்டுப் பகுதியில் மிகவும் பிரபலமானது. திருவிழாக்காலங்களில் இதை செய்து விருந்தினர்களை உபசரிப்பது வழக்கம்.

தேவையான பொருட்கள்:
பாசிப் பருப்பு: 2 கப்
சர்க்கரை: 2 கப்
நெய்: 200 கிராம்
ஏலக்காய்: 6
முந்திரி உடைத்தது: 50 கிராம்

செய்முறை:
* பாசிப்பருப்பை வாணலியில் சூடாக, வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். வறுத்த பருப்பை மிக்சியில் அரைக்கவும். அதை சலித்து எடுத்து நைசான மாவை, லட்டு பிடிக்க வைத்துக் கொள்ளவும்.
* அதேபோல் சர்க்கரையையும் மிக்சியில் அரைத்து கலக்கவும். இதோடு மூன்று ஏலக்காய் சேர்க்கவும். ஏலக்காயை லேசாக நெய்யில் வறுத்து, தோலோடு சேர்த்து மிக்சியில் பொடி செய்து கொள்ளவும். முந்திரிப் பருப்பை சிறிது நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் கலந்து ஒரு பேசினில் போட்டு வைக்கவும்.
* வாணலியில் 200 கிராம் நெய் ஊற்றி உருக்கவும். நெய் கருகாமல் சூடான உடன், அதை மாவின் மேல் ஊற்றவும். அந்த மாவை கலந்த, வெது வெதுப்பான சூட்டிலேயே கையால் லட்டு பிடிக்கவும். பின், ஒரு தட்டில் இட்டு ஆற வைக்கலாம்.
* பின் டப்பாவில் போட்டு மூடிவைத்து, தேவைப்படும் போது எடுத்துச் சாப்பிடலாம். 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். சுவையான சத்தான இனிப்பு இது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement