Advertisement

ஆரோக்கிய சமையல்: சளி, இருமலை போக்கும் 'வெற்றிலை ரசம்'

மருத்துவ குணங்கள் நிறைந்த வெற்றிலை, செரிமானத்துக்கு உதவும் சுரப்பிகளைத் தூண்டி சீரணத்தை எளிதாக்குகிறது. இரைப்பைப் புண், வாயுக்கோளது, இருமல், சளி உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகளும் குணமாக, பாரம்பரிய மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவ குணம் கொண்ட வெற்றிலை ரசம் தயாரிக்கும் செயல்முறை இங்கே!

தேவையான பொருட்கள்:
வெற்றிலை: 4
பூண்டு: 10 பல்
புளி: எலுமிச்சை அளவு
தக்காளி: 2
பெருங்காயம்: 1/2 சிட்டிகை
மஞ்சள் தூள்: 1 சிட்டிகை
உப்பு எண்ணெய்: தேவைக்கேற்ப
மிளகு: 1 டீஸ்பூன்
சீரகத்தூள் : 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்: 5
இஞ்சி: 1 துண்டு
கடுகு: 1 ஸ்பூன்
கறிவேப்பிலை: சிறிதளவு

செய்முறை
* ஒரு பாத்திரத்தில் ரசம் வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் புளி, உப்பு சேர்த்து, சிறிய துண்டுகளாக இஞ்சி, நசுக்கிய பூண்டு, காய்ந்த மிளகாய், சீரக தூள் மற்றும் மிளகு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். அதோடு வெற்றிலையையும் சிறு துண்டுகளாக சேர்த்து, நன்கு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்து, ரசத்தோடு சேர்த்துவிடவும். சுவையான வெற்றிலை ரசம் தயார்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement