Advertisement

செட்டிநாட்டு சுவை: செட்டிநாடு மட்டன் உருண்டை

சாப்பாட்டின் தொடக்கத்தில் உண்ணக்கூடிய பாரம்பரிய 'அப்படைசர்' உணவுக்கு பொருத்தமானது, செட்டிநாடு மட்டன் உருண்டை...

தேவையான பொருட்கள்
கொத்துக்கறி: 750 கிராம்
தேங்காய் துருவல்: 3/4 கப்
பச்சை மிளகாய்: 7
கசகசா: 2 ஸ்பூன்
பட்டை : 1
பூண்டு: 10 பல்
பெரிய வெங்காயம்: 4
முட்டை : 1
பொட்டுக்கட்லை: 7 ஸ்பூன்
சோம்பு : 1 ஸ்பூன்
இஞ்சி : சிறு துண்டு
உப்பு, மஞ்சள்தூள்: தேவையான அளவு

செய்முறை:
* தேங்காய்த் துருவல், பொட்டுக்கடலை, கசகசா ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்
* வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* குக்கரில் ஒரு கப் எண்ணெய் விட்டு பட்டை, சோம்பு சேர்த்து தாளித்து கொள்ளவும்.
* கறியுடன், நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்து, 15 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் வற்றி வதங்கியதும், அரைத்துக் கொள்ளவும்.
* அரைத்து வைத்துள்ள கறியுடன், முட்டையை உடைத்து ஊற்றி, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது மற்றும் தாளித்து வைத்த பட்டை, சோம்பு சேர்த்து, நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்து எடுக்கவும்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement