Advertisement

பழங்களின் மகத்துவம்

நம் உடலுக்கு வலு சேர்ப்பதில், பழங்களுக்கு எப்போதுமே தனியிடம் உண்டு. ஒவ்வொரு பருவத்திலும் விளையும் பழங்களை உண்டு வந்தால், உடலுக்கு தேவையான சக்திகள் கிடைக்கும்.
மாம்பழம்: முக்கனிகளில் ஒன்று மா. இதன் சுவையும், மணமும் அலாதி. இதில், மல்கோவா மாம்பழத்தின் சுவையே தனி. இப்பழத்தை உண்டால், தோல் நோய், அரிப்பு போன்றவை மாறும். தீராத தலைவலியை தீர்க்கும்.
அன்னாசி: அதிகளவு கிளைசீமிக் குறியீடு இருப்பதால், இப்பழத்தை அறவே தவிர்க்க வேண்டும். ஒரு சிறிய கப் அன்னாசிப் பழத்தில், 20 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட அளவு, கார்போஹைட்ரேட் உள்ளது.
பப்பாளி: பப்பாளியில், 59 ஜி.ஐ., கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன. இதை, சர்க்கரை நோயாளிகள், தங்களின் சர்க்கரை அளவுக்கு ஏற்றவாறு உண்ண வேண்டும்.
சீத்தா: வைட்டமின் சி, கால்சியம், இரும்பு மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பிய இப்பழத்தில், சர்க்கரை அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். 100 கிராம் சீத்தாப்பழத்தில், போதியளவு கார்போஹைட்ரேட் உள்ளது.
ஆப்பிள்: தினம் ஒரு ஆப்பிளை உண்டு வந்தால், மருத்துவரை பார்க்க தேவையில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement