Advertisement

டெக் நியூஸ்! : ஆப்பிள் நெக்ஸ்ட், சாம்சங் பஸ்ட்!

ஆப்பிள் நிறுவனத்தின், 'ஐபோன் X' அறிமுகம் செய்யப்பட்டது முதல், சர்வதேச சந்தையில் அதிகம் விற்பனையாகி வந்தது. அதே நேரத்தில் அதற்கு இணையாக வெளியான, சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த, 'கேலக்ஸி எஸ்9' ஸ்மார்ட்போன்களும் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. 'கேலக்ஸி எஸ்9 பிளஸ்' மாடல் தான், ஏப்ரல் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என்கிறது கவுன்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை.
'கேலக்ஸி எஸ்9' மற்றும் 'எஸ்9' பிளஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை, ஆசியா பசிபிக் மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் அதிகரித்து இருக்கிறது. இவை பட்டியலில் முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை பிடித்திருக்கின்றன. ஐபோன் X , ஐந்தாவது இடத்தையே பிடித்திருக்கின்றது.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement