Advertisement

வானமே எல்லை!

'சாண்ட்லியர் எனும் சரவிளக்குகளை மிகச்சுலபமாய் வீட்டிலேயே வடிவமைக்கலாம்; விற்பனையில் பெரும் லாபம் பார்க்கலாம்!' - இந்த ஒற்றை வரி ஆச்சரியத்தை நிஜமாக்குவது எப்படி?

ஒளித்தட்டு
மணிகள், பீட்ஸ் மற்றும் ஸ்ட்ரா கோர்க்கப்பட்ட நுால் சரங்களை, வட்ட/சதுர வடிவ தட்டின் துளைகளில் முடிச்சிட்டு தொங்க விட்டால், ஒரு தட்டு சாண்ட்லியர் தயார். இதேபோன்று இரண்டு, மூன்று, நான்கு என, தட்டு வரிசைகளை அதிகப்படுத்தி அடுக்கடுக்கான சாண்ட்லியர் உருவாக்கலாம். தட்டுகள் அனைத்தும் ஒரே அளவாக இருப்பது அழகு; ஒளி பரவலாக விழ, குறைந்தது மூன்று அடுக்கு அமைப்பது சிறப்பு!

தேவைகள்
சாண்ட்லியர் விளக்குகள் தயாரிப்பிற்கென, பிரத்யேகமாக துளையிடப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் கிரிஸ்டலில் தயாரான வட்ட மற்றும் சதுர வடிவ தட்டுகள், எல்லா ஆர்ட் அண்ட் கிராப்ட் ஸ்டோர்களிலும் கிடைக்கின்றன. இங்கேயே, பலவித வண்ணங்கள் மற்றும் வடிவங்களினால் ஆன கிரிஸ்டல் பீட்ஸ் மற்றும் மணிகள், ஸ்ட்ரா, நுால் உள்ளிட்டவற்றையும் வாங்கிக் கொள்ளலாம்.

ஒரு நாளைக்கு...
சாண்ட்லியர் தயாரிப்பு பயிற்சியை ஒரே நாளில் முழுமையாக கற்றுக் கொள்ளலாம். ஒரு தட்டு சாண்ட்லியரை உருவாக்க, குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும். விளக்கு பொருத்தும் வகையிலான கலைநயமிக்க மூன்று தட்டு வரிசை சாண்ட்லியரை, அதிகபட்சம் இரண்டு நாட்களில் வடிவமைத்து விடலாம். வாரத்திற்கு மூன்று சாண்ட்லியர் தயாரிப்பு எனும் வகையில், மாதத்திற்கு 12 சாண்ட்லியர் தயாரிக்கலாம்.

லாபம்
ஒரு வரிசை சாண்ட்லியருக்கு 60 ஸ்ட்ரா, பீட்ஸ், மணிகள் 250 கிராம் மற்றும் ஒரு தட்டு உள்ளிட்ட மொத்தமும், 300 ரூபாய்க்குள் அடங்கி விடும். வசீகர அலங்கார விளக்கான இது, 600 ரூபாய் வரை விலை போகும். மூன்று வரிசை சாண்ட்லியருக்கு, 1,000 ரூபாய் வரை செலவாகும். கூடுதலாக 300 ரூபாய் செலவு செய்து எல்.இ.டி., விளக்குகளால் அலங்கரித்தால், 2,000 ரூபாய் வரை விலை போகும். பரிசுப் பொருட்கள் விற்பனையகமும், அலங்கார விளக்குகள் விற்பனையகமும் சாண்ட்லியருக்கான வியாபார ஸ்தலங்கள்.

தகவல் உதவி: லாவண்யா, பம்மல், சென்னை. 95662 00314

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement