Advertisement

டெக் நியூஸ்!: பிளே ஸ்டோரிலிருந்து சரஹா நீக்கம்!

சில மாதங்களுக்கு முன்பாக சரஹாவை பற்றியும், சரஹாவிலும் பேசாதவர்களே இல்லை. சுய அடையாளத்தை மறைத்துக்கொண்டு, ரகசியமாக மெசேஜ் அனுப்பும் வசதியை அளித்ததால் சரஹா செயலி அனைவரையும் கவர்ந்தது. நம் பெயர் தெரியாதபடி, யாருக்கு வேண்டுமானாலும் மெசேஜ் செய்ய முடியும் வசதியை அளிக்கும் சரஹா செயலியை, சமீபத்தில் தனது பிளே ஸ்டோரிலிருந்து நீக்கி இருக்கிறது கூகுள். இந்த ரகசிய மெசேஜ் வசதியை பயன்படுத்துபவர்களின் மொபைல் மூலம், பல தகவல்கள் திருடப்படும் அபாயம் உள்ளது என்று புகார்கள் வந்ததை தொடர்ந்து, இந்த நடவடிக்கையை கூகுள் எடுத்துள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கேத்ரினா காலின்ஸ் என்ற பெண், பாலியல் தொந்தரவு கொடுக்கும் மெசேஜ்கள் குவிகின்றன என்று கூறி, சரஹாவை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்க வேண்டும் என்று இணையத்தில் மனு ஒன்றை உருவாக்கினார். அவர் உருவாக்கிய மனுவில், 4.7 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement