Advertisement

டெக் நியூஸ்!: கூகுள் லென்ஸ் வந்தாச்சு!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கூகுள் லென்ஸ், கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்கு மட்டும் சில மாதங்கள் முன்பாக பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது, இந்த வசதியை அனைத்து ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கும் வழங்கியுள்ளது கூகுள். கூகுள் லென்ஸ் என்பது புகைப்படங்கள் மூலம் தகவல்களைப் பெறும் நவீனத் தொழில்நுட்பமாகும். ஒரு புகைப்படத்தில் உள்ளவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள இது மிகவும் உதவியாக இருக்கும். கட்டிடம் ஒன்றின் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ஸ்கேன் செய்தால், அந்தக் கட்டிடம் சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
அதேபோல, ஒரு புகைப்படத்தில் உள்ள எந்த பொருளைப் பற்றியும், லென்ஸ் தகவல் கொடுக்கும். ஒரு நபரின் புகைப்படம் என்றால், அவர் யார் என்பதை கூகுள் லென்ஸ் தெரிவிக்கும். ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் அறிமுகமாகியுள்ள இந்த வசதி, விரைவில் ஐபோன்களுக்கும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement