Advertisement

வரவிருக்கும் கேட்ஜெட்!: அதிரடி அம்சங்களுடன் ஹூவெய் ஸ்மார்ட்போன்!

ஹூவெய் நிறுவனம் விரைவில் வெளியிட இருக்கும் 'P20' ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் பற்றி டுவிட்டர் தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல ஸ்மார்ட்போன் வல்லுநரான எவான் பிளாஸ், P20, P20 லைட் மற்றும் P20 புரோ ஆகிய மாடல்கள் பற்றிய தகவல்களை தனது டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். மூன்று ஸ்மார்ட்போன்களிலும் மெல்லிய பெசல் - லெஸ் ஸ்கிரீன் மற்றும் ஸ்கிரீனின் அடிப்பகுதி சற்றே தடிமனாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹூவெய் P20 மற்றும் P20 புரோ ஸ்மார்ட்போன்களில், கைரேகை சென்சார் முன்புறத்தில் திரையின் கீழ் பகுதியில் வழங்கப்பட்டு இருக்கும் நிலையில், P20 லைட் ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் P20 மற்றும் P20 லைட் ஸ்மார்ட்போன்களில், இரட்டை ேகமராக்கள் கொண்ட, டூயல் கேமரா அமைப்பும், P20 புரோ ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா அமைப்பும், கொண்டிருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. விலையை பொறுத்தவரை, ஹூவெய் P20 ஸ்மார்ட்போன், P20 லைட் மற்றும் P20 புரோ ஸ்மார்ட்போன்களின் விலைகள் முறையே, ரூ.54,000, ரூ.30,000, மற்றும் ரூ.73,500 ஆக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement