Advertisement

மாண்புமிகு மாணவி!

யார் இவர்?
பெயர் : ஜெ.கோலேஷியா
பெற்றோர் : புஷ்பம் - ஜெபசீலன்
படிப்பு : 10ம் வகுப்பு
பள்ளி : புனித தெரசா மேல்நிலைப்பள்ளி, வடக்கன் குளம், திருநெல்வேலி.
அடையாளம்: தடகள வீராங்கனை

'எந்த ஒரு செயலா இருந்தாலும் அதுல முழு கவனத்தையும் செலுத்தி தியான மனப்பான்மையோட செயல்படுவேன். இதுதான், என் வெற்றிகளுக்கு காரணம்!' என்கிறார் தேசிய/சர்வதேச அளவிலான தடகள போட்டிகளில் சாதித்து வரும் இந்த மாண்புமிகு மாணவி.

விளையாட்டை நேசி
மூணு வருஷத்துக்கு முன்னாடி, என் அப்பா திடீர்னு தவறிட்டார். அந்த இழப்புல இருந்து நான் மீண்டு வர, இந்த ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகள் தான் காரணம்.
இது தவிர, படிப்புலேயும் நான் முதல் மாணவியா இருக்குறேன். 'புதியன்புத்துார்'ங்கிற எங்க கிராமத்தை, இந்த உலகம் அறியுறதுக்காக தொடர்ந்து போராடுறேன். இது எல்லாத்துக்கும் அடிப்படை என் விளையாட்டு! கண்டிப்பா ஒலிம்பிக் போட்டிகள்ல நான் சாதிப்பேன்.

பிடிக்காத நபர்கள்
சிரமப்பட்டு படிக்க வைக்கிற பெத்தவங்களோட வலிகளை புரிஞ்சுக்காத பிள்ளைகள்; பணியில உண்மையா இல்லாம, மாதம் பிறந்ததும் கூச்சப்படாம சம்பளம் வாங்குற ஊழியர்கள்; பதவிக்கு தேர்ந்தெடுத்த மக்களை உதாசீனப்படுத்துற தலைவர்கள்; நம்பிக்கை துரோகிகள்... இவங்க அத்தனை பேரும் எனக்கு பிடிக்காதவர்கள்; தண்டனைக்குரியவர்கள்.

வெற்றிக்கு வழி
தன்னம்பிக்கை. 'என்னால முடியும்'னு ஒவ்வொரு மனசும் நம்பணும். ஆசிரியர்களோட கண்டிப்பு இல்லாம போனா எதிர்காலம் இருண்டு போயிடும்ங்கிற உண்மையை மனசார ஏத்துக்கணும். எந்தவொரு விஷயத்தையும் மேலோட்டமா அணுகாம, ஆழமா ஆராயணும். இந்த பண்புகள் நிச்சயம் வெற்றியை கொடுக்கும்.

எங்கள் கோலேஷியா
'தன் தவறுகளை திருத்திக்கிற விதமும், வறுமையை எதிர்த்துப் போராடுற குணமும், நிச்சயமா இந்த 'கோல்டன் கேர்ள்' ஆசைப்படியே இவளை மருத்துவர் ஆக்கிடும். இது சத்தியம்!'
- தெரசா சாமந்தி, உடற்கல்வி ஆசிரியை.

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement