Advertisement

குருபார்வை

எம்.சி.ஏ., முடித்துள்ள நான், வங்கித் துறையில் பணிபுரிய விரும்புகிறேன். கிளார்க் தவிர எனது படிப்புகேற்ற வங்கி வேலை இருக்கிறதா?
- சுஜாதா, காரைக்குடி

இன்று போட்டித் தேர்வு எழுதி வங்கி வேலைக்கு செல்பவர்களில் 90 சதவீதம் பேர் இன்ஜினியரிங் படித்தவர்கள் என்பதை அறியுங்கள். சமீபகாலமாக டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுகளிலும், இன்ஜினியரிங் பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே வங்கித் துறையில் வேலை பெறுவது என்பது மிகக் கடினமானதாக உள்ளது. வங்கி தவிர, நிதித் துறையில் உள்ள பொதுதுறை நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாக கிளார்க் மற்றும் நேரடி அதிகாரி நிலை பணிவாய்ப்புகளை அறிவித்து வந்தன. ஆனால் சமீபத்திய தேசிய பட்ஜெட்டில், மூன்று பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் இணைப்பு குறித்த அறிவிப்பிற்கு பின், அத்துறையில் எண்ணற்றோர் உபரியாக வேலையில் இருப்பதாக விரைவில் அறிவிக்கப்படலாம். எனவே அத்துறையின் வேலை வாய்ப்பு தற்போது கேள்வி குறியாகி விட்டது. எனவே வங்கித்துறை ஒன்று தான் உங்களை போன்ற எண்ணற்றோருக்கு வேலை வாய்ப்பை அளிக்கக் கூடியது. கிளார்க் அல்லது பி.ஓ., போன்றவற்றுடன் குறிப்பாக சிறப்பு அதிகாரி வாய்ப்பும் அறிவிக்கப் படுகின்றன. இவற்றுக்கு தவறாது விண்ணப்பிக்கவும்.

Oracle Application Developer ஆக பணிபுரிந்து வந்த நான், மகப்பேறுக்காக பணியில் இருந்து விலகி, ஓய்வில் இருக்கிறேன். மீண்டும் அது போன்ற வேலை பெறுவது சிரமமாக உள்ளது. என்ன செய்யலாம்?
- வனஜா, கோவை

தற்போதைய சூழலில், பிளேஸ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனம் ஒன்றில் பதிவு செய்து கொள்ளுங்கள். உங்களது திறன்களுக்கு ஏற்பவும் தகுதிக்கு ஏற்பவும் இது போன்ற நிறுவனங்கள் வேலை பெற உதவும்.

சென்னையில் உள்ள என்.ஐ.எப்.டி., எனப்படும் கல்வி நிறுவனம் அளிக்கும் படிப்புகள் குறித்து கூறலாமா?
- சம்சுதீன், சென்னை

இந்நிறுவனம் அளிக்கும் Bachelor of Design (Accessory Design) என்ற நான்காண்டு படிப்பானது, எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, குழு விவாதம் போன்ற தேர்வு முறைகளின் அடிப்படையில் உங்களுக்கு வழங்கப்படும். இப்படிப்பை முடிப்பவருக்கு டிசைனர், பிராண்ட் மேனேஜர், விசுவல் மெர்ச்சன்டைசிங், புராடக்ட் மேனேஜர் போன்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இது போலவே மற்றொரு 4 ஆண்டு படிப்பானது Bachelor of Design (Fashion Communication) என்ற பெயரில் தரப்படுகிறது. கிராபிக் டிசைன், விசுவல் மெர்ச்சன்டைசிங், ரீடெய்ல் ஸ்பேஸ் டிசைன், ஸ்டைலிங் அண்ட் போடோகிராபி, பேஷன் ஜர்னலிசம், பி.ஆர்., ஈவண்ட்ஸ் அண்ட் பேஷன் அட்வர்டைசிங் ஆகிய பிரிவுகளில் நீங்கள் பணிவாய்ப்பு பெறலாம். இதை போலவே பேஷன் டிசைன், நிட்வேர் டிசைன், லெதர் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், அபாரல் புரொடக்சன் போன்ற பிரிவுகளிலும் 4 ஆண்டு படிப்புகள் தரப்படுகின்றன.
இந்த நிறுவனம் இந்தியாவில் மிகச் சிறந்த பேஷன் கல்வி நிறுவனம் என்பதை அறியவும்.

Advertisement
 
Outbrain

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement