Advertisement

பாதுகாப்பு படையில் ஓட்டுனர் பணி

நாட்டின் காவல் படைகளில் இந்தோ திபெத்தியன் பார்டர் போலீஸ் எனப்படும் ஐ.டி.பி.பி., படை, முக்கிய பங்கு வகிக்கிறது. இது அடிப்படையில், இந்தியா மற்றும் திபெத் நாடுகளின் எல்லைகளில் பாதுகாப்புப் பணிகளுக்காக உருவாக்கப்பட்டது.
இந்தப் படையில் குரூப் சி,- 'நான் கெசட்டடு மற்றும் நான் மினிஸ்டிரியல்' பிரிவிலான கான்ஸ்டபிள் - டிரைவர் காலியிடங்கள் 134ஐ ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : 21 முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
இதர தகுதி : லைட் மீடியம் அல்லது ஹெவி மோட்டார் வெகிக்கிள் லைசென்ஸ் பெற்றவராக இருக்கவேண்டும். குறைந்தது 2 ஆண்டு ஓட்டுனர் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் 100 ரூபாய்.
தேர்ச்சி முறை : சான்றிதழ் சரிபார்த்தல், உயரத் தகுதி, உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, பிராக்டிகல் ஸ்கில் டெஸ்ட் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
கடைசி நாள் : 2018 மார்ச் 15.
விபரங்களுக்கு: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19143_15_1718b.pdf

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement