Advertisement

கெமிக்கல் நிறுவனத்தில் டெக்னிகல் வாய்ப்பு

திருவாங்கூர் கொச்சி கெமிக்கல்ஸ் லிமிடெட் என்பது கேரள அரசின் வேதிப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாகும். காஸ்டிக் சோடா, குளோரின் உள்ளிட்ட பொருட்கள் உற்பத்திக்கு இந்நிறுவனம் பெயர் பெற்றது. இங்கு காலியாக உள்ள ஆபரேட்டர்/பிட்டர் மெக்கானிக்/ஹெல்ப்பர் ஆகிய பிரிவுகளில் 39 இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிட விபரம் : ஆபரேட்டரில் 11, பிட்டர் மெக்கானிக்கில் 8, ஹெல்பர் (பிட்டர்) - 13, ஹெல்பர்(எலக்ட்ரிக்கல்) - 4, ஹெல்ப்பர் (இன்ஸ்ட்ரூமென்டேஷன்) - 3 என 39 காலியிடங்கள் உள்ளன.
வயது : 2018 பிப்., 1 அடிப்படையில் 41 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய, டிரேடு பிரிவில் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பு தேவைப்படும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
கடைசி நாள்: 2018 பிப்., 23.
விபரங்களுக்கு: <http://tcckerala.com/News/NewsDetails.aspx?NewsId=120>

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement